தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு

 சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு

 சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு


ADDED : ஆக 22, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னுார்: சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கணினி உதவியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில், 2001ம் ஆண்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், சுகாதார திட்டம் துவங்கப்பட்டு, பின், முழு சுகாதார திட்டம் என மாற்றப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், ஒரு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளரும், கணினி உதவியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துாய்மை பாரத இயக்கத்தின் கீழ், பொதுமக்களிடம், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவது உட்பட பணிகளை செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு பதில், கருவூலத்திலிருந்து சம்பளம் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பின், தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது.

சுகாதார திட்ட பணியாளர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு மாதமும் மிகவும் தாமதமாக சம்பளம் வழங்குவதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். ஜூலை மாத சம்பளம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்க வேண்டியது, இதுவரை வழங்கவில்லை. ஒவ்வொரு மாதமும் பலமுறை நினைவூட்டி சம்பளம் வழங்கப்படுகிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us