/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
/
பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2025 10:11 PM
பொள்ளாச்சி; மழை காலத்தில், பள்ளி வளாகங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பருவமழையின் தாக்கம் குறையாமல் உள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சில அரசு பள்ளிகளின் வளாகத்தில், தண்ணீர் தேக்கமடைந்துள்ளது.
இதனால், கட்டடங்களின் மேற்கூரையில் தண்ணீர் தேக்கமடைந்திருப்பதை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில், கொசுக்கள் உற்பத்தி காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை தவிர்க்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
மழையால், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேக்கமடைவதை கண்டறிந்து தடுக்க வேண்டும். மழைநீர் தேங்காதவாறு உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். சில பள்ளிகளை சுற்றி அமைந்துள்ள வடிகாலில் தண்ணீர் தேக்கமடைந்து சுகாதாரம் பாதிக்கிறது. நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பள்ளி தலைமையாசிரியர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.