/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டுத்தொழுவமாக மாறிய பாலத்தில் சுகாதார பாதிப்பு
/
மாட்டுத்தொழுவமாக மாறிய பாலத்தில் சுகாதார பாதிப்பு
ADDED : மே 20, 2025 11:48 PM
வால்பாறை; மாட்டுத்தொழுவமாக மாறி வரும் இணைப்பு பாலத்தில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சின்கோனா, முடீஸ், நல்லகாத்து ஆகிய பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு பாலம் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த பாலம், கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
மிகவும் பழமையான இந்த பாலத்தின் வழியாக தான், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சமீப காலமாக இந்த பாலத்தின் பக்கவாட்டில் பிளவு ஏற்பட்டு, பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனிடையே, இந்த பாலத்தில் இரவு நேரங்களில், மாடுகள், எருமைகள் ஆக்கிரமிக்கின்றன. இதனால், மாட்டுத்தொழுவமாக மாறிய இணைப்பு பாலத்தில், கொசுத்தொல்லை அதிகரித்து, சுகாதாரம் பாதிப்பதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி அதிகாரிகள் இரவு நேரங்களில் பாலத்தில் ஓய்வெடுக்கும் கால்நடைகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பாலத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.