/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு நீர் தேக்கத்தால் சுகாதாரம் பாதிப்பு
/
கழிவு நீர் தேக்கத்தால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஏப் 01, 2025 10:25 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குமாரபாளையம் பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, குமாரபாளையம் மயானம் செல்லும் ரோட்டில் இருபக்கமும் அதிகளவு விவசாயம் சார்ந்த பகுதிகள் உள்ளன. இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய் வாயிலாக, கழிவு நீர் வெளியேறி விளைநிலம் அருகே தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், விளை நிலம் பாதிக்கப்படுவதுடன், அவ்வழியே செல்பவர்களுக்கும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதி மக்களும் பாதிக்கின்றனர். நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகமோ அல்லது ஒன்றிய அதிகாரிகளோ இதை கவனித்து உடனடியாக கழிவு நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

