
புற்றுநோயை குணப்படுத்த முடியும்
ஆண்களுக்கு வாய், உதடு, நுரையீரல், இரைப்பை ஆகியவையும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகியவை நோய் தாக்கும் இடங்கள்.
சுகாதாரம் இல்லாததே, பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணம். புகையிலை, சிகரெட், குடிப்பழக்கம் ஆண்களுக்கு காரணமாக உள்ளது. ஆனால், இவையெல்லாம் 20 சதவீதம் மட்டுமே, 80 சதவீத புற்றுநோய் உணவு முறைகளால்தான் ஏற்படுகிறது. நாம் தினசரி சாப்பிடும் உணவு, உடல் பருமன், நமது வாழ்வியல் முறை, மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றை அதிக நேரம் பார்ப்பது, மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் துாக்கமின்மையும், புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. புற்றுநோய் வராமல் இருக்க, நமது உணவு முறை, வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். புற்றுநோய் ஒரு உயிர் கொல்லி நோயாக இருந்தாலும், குணப்படுத்த முடியும், உயிரை பாதுகாக்க முடியும். பெண்கள் மாதம் ஒரு முறை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வலி, கட்டி போன்று ஏதாவது இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டும். பலர் நோய் முற்றிய பிறகே, மருத்துவமனைக்கு செல்கின்றனர். புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து, விரைவில் கண்டுபிடிக்கப்படலாம். பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் புற்றுநோயை வென்று, இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மாதவிடாய் சொல்லும் சேதி
பெண்களுக்கு மாதவிடாய், மாதம் ஒருமுறை வரும். சிலருக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை வரும். இதில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் தள்ளி போனால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் என்பது மனதையும், எண்ணங்களையும் சார்ந்தது. பெண்கள் கவலைப்படுவதை விட்டு, விட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தாய் நலமாக இருந்தால்தான், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.
டாக்டர் பாலமுருகன்
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

