/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரப்பணிகள்: கமிஷனர் ஆய்வு
/
சுகாதாரப்பணிகள்: கமிஷனர் ஆய்வு
ADDED : ஜூலை 22, 2025 10:01 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், குப்பை அள்ளுதல், கழிப்பிடம் துாய்மை உள்ளிட்ட பணிகளில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை நகராட்சி கமிஷனர் கணேசன் ஆய்வு செய்தார்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:
முதல்வரின் காலை உணவுத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு, உணவு தரமாக வழங்கப்படுகிறதா என கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் முறையாக பணிக்கு வருகின்றனரா என பார்வையிட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.
குடியிருப்பு பகுதி மற்றும் பஸ் ஸ்டாண்டில் பொது கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பார்வையிடப்பட்டு உரிய அறிவுரைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
மழை காலம் என்பதால் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் வார்டுகளில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய அறிவுரை வழங்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.

