தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தைகள் நலன் காக்க உருவாகிறது ‘ஹெல்த்தி ஸ்நாக்ஸ்’

குழந்தைகள் நலன் காக்க உருவாகிறது ‘ஹெல்த்தி ஸ்நாக்ஸ்’

குழந்தைகள் நலன் காக்க உருவாகிறது ‘ஹெல்த்தி ஸ்நாக்ஸ்’


ADDED : செப் 25, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் பிஸ்கட், கேக், சாக்லேட் என வழக்கமான தேர்வுகள்தான்.

ஆனால், அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து பெற்றோர்களிடம் இன்று விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு பிடித்த சுவையுடன், சற்று ஆரோக்கியமான மாற்று உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது.

பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனர் பரணி தினேஷ்,10 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைக்காக சிறுதானிய உணவு தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.

குழந்தைக்கு பிடித்த ஸ்நாக்ஸ்களை, பாரம்பரிய தானியங்களுடன் இணைத்து தயாரித்த இவரது முயற்சி, நண்பர்கள், உறவினர்களிடம் வரவேற்பை பெற்று இன்று தொழிலாக மாறியுள்ளது.

மல்டி மில்லட்ஸ், அரிசி மாவு உள்ளிட்ட சிறுதானியங்களை பயன்படுத்தி பிரவுனி, குக்கீஸ் போன்றவற்றை தயாரித்து வருகிறார். குறிப்பாக பிரவுனியில் கூவர்ச்சர் சாக்லேட் பயன்படுத்தி, குழந்தைகள் விரும்பும் சுவையை கொண்டு வருகிறார்.

சில தயாரிப்புகளில் பட்டர் போன்ற பொருட்களை தவிர்ப்பதுடன், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில பொருட்களை மாற்றியும் தயாரிக்கிறார்.

கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற பாரம்பரிய சிறுதானியங்களுக்கு நவீன அவதாரம் கொடுத்து, குழந்தைகள் விரும்பும் ஸ்நாக்ஸ்களாக மாற்றுவதே இவரது நோக்கம்.

உணவு ஒவ்வாமை அல்லது சர்க்கரை நோய் போன்ற மருத்துவ தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு, உணவு தேர்வு செய்யும்போது மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர் ஆலோசனை அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.

“ஆரோக்கியமான உணவு என்ற பெயரில் சுவையை விட்டுக்கொடுக்கக்கூடாது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், தரமான பொருட்களுடன் தயாரிப்பதே முக்கியம்” என்கிறார் பரணி தினேஷ்.

சமூக வலைதள வளர்ச்சியால் இன்று வீட்டில் தயாரிக்கும் உணவுகளை எளிதாக பலரிடம் கொண்டு செல்ல முடிவதால், பெண்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பலரும் பாரம்பரிய உணவுகளை புதிய வடிவில் தயாரித்து சிறுதொழிலாக மாற்றி வருகின்றனர்.

பாரம்பரிய சிறுதானியம் + நவீன ரெசிபி + குழந்தைகளுக்கு பிடித்த சுவை என புதிய தலைமுறைக்கான ஹெல்த்தி ஸ்நாக்ஸ் டிரெண்ட் உருவாகி வருகிறது.

Instagram: @arockiya_adumanai | தொடர்புக்கு: 88708 99661.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us