ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் இன்று (ஏப்.,7) அனுசரிக்கப்படுகிறது.
இது, 1948 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.
உலகம் எதிர்கொள்ளும் முக்கியமான சுகாதாரப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதற்கும் இந்த தினம் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், 'ஆரோக்கியமான தொடக்கங்கள், நம்பிக்கையான எதிர்காலங்கள்' என்பது நடப்பாண்டு உலக சுகாதார தினத்திற்கான கருப்பொருளாக உள்ளது.
இந்த ஆண்டின் கருப்பொருள், தடுக்கக் கூடிய தாய் வழி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புகளை குறைப்பதற்கான விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை மேம்படுத்துவதில் இந்த கருப்பொருள் கவனம் செலுத்துகிறது.
இந்த பிரசாரம் கர்ப்ப காலத்தில் உயர் தர பராமரிப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
பெண்களின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கவும் அரசாங்கத்தையும், சுகாதாரத்துறையையும் வலியுறுத்துகிறது.

