ADDED : செப் 28, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
உலக இதய தினம் கடைபிடிப்பதன் அவசியம் குறித்து, பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனரும், மூத்த இதயநோய் நிபுணருமான டாக்டர் புவனேஸ்வரன் கூறியதாவது:
‘இதய துடிப்பை தவறவிடாதீர்கள்’ என்பதே இந்தாண்டுக்கான இதய தின கருப்பொருள். இதய துடிப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதி செய்தால் இதயம் நலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
