/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இதயங்கள்' அறக்கட்டளையின் 8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
'இதயங்கள்' அறக்கட்டளையின் 8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
'இதயங்கள்' அறக்கட்டளையின் 8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
'இதயங்கள்' அறக்கட்டளையின் 8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஏப் 28, 2025 05:21 AM

கோவை : கோவை இதயங்கள் அறக்கட்டளையின், 8வது ஆண்டு விழா, நேற்று அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா அரங்கில் நடந்தது. இதில், தேசிய சுகாதார திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ்  தலைமை வகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.
இதில், அவர் பேசியதாவது:
இதயங்கள் அமைப்புடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. டைப்1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, நிலையான மாநில அளவிலான சிகிச்சை முறைகளை செயல்படுத்தவுள்ளோம்.
இந்நிகழ்வில், டைப்1 பாதிப்பு உள்ள ஒருவர் , பேனா டைப் ஊசி வழங்க கோரிக்கை முன்வைத்தார். இதுகுறித்து, கட்டாயம் அரசிடம் எடுத்துச்செல்லப்படும்.
அரசு மருத்துவமனைகளில், தற்போது இன்சுலின் ஊசி வழங்கப்படுகிறது. ஆனால், வலியின்றி போட உதவும் பேனா ஊசி, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் இல்லை என்றாலும், வயது அடிப்படையில் சிறிய குழந்தைகளுக்கு வழங்க, அரசிடம் பேசி நல்ல தீர்வு உடனடியாக காணப்படும்.
இக்குழந்தைகளுக்கு கவுன்சிலிங் உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு தரப்பில் 104 உதவி எண்ணில், சர்க்கரை நோய் ஆலோசகர் நியமிக்கவுள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்வின் முக்கிய பகுதியாக,  இதயங்கள் அறக்கட்டளை மற்றும் திருச்சங்கோடு சண்முகா கல்விநிறுவனங்கள் இணைந்து, டைப் 1 சர்க்கரையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ, 'கால் சென்டர்' திட்டம் , விதை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், இதயங்கள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், சேலம் டீன் தேவி மீனாள்,  திருச்சங்கோடு சண்முகா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமூர்த்தி, ஜி.டி., அறக்கட்டளை நிர்வாகி அஞ்சன குமார், இதயங்கள் அறக்கட்டளை சி.எஸ்.ஆர்., இயக்குனர் ரமேஷ்,  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வலியின்றி போட உதவும் பேனா ஊசி, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வயது அடிப்படையில் சிறிய குழந்தைகளுக்கு வழங்க, அரசிடம் பேசி நல்ல தீர்வு உடனடியாக காணப்படும்.

