ADDED : பிப் 10, 2024 09:07 PM
கோவை:கோவையில் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அறுவடை நிலையிலுள்ள பயிர்களை உடனடியாக அறுவடை செய்து நன்கு உலர்த்தி சேமிக்கவும், அதிக வெப்பம் காரணமாக, உறிஞ்சும் பூச்சித்தாக்குதல் அதிகரிக்கலாம்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஐந்து நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலை, 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பநிலை 21-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம் 80-90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் இருக்கும். நீர்பாசனம் உள்ள இடங்களில் மட்டும், இரவை மக்காச்சோள விதைப்பினை மேற்கொள்ளவும்.
நிலத்தினை சரியாக பாதுகாத்து தண்டு கருகல் நோயிலிருந்து பாதுகாக்கவும். முன்பருவ கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளலாம் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.

