நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுாரில் ஒன்றரை மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்னுார் வட்டாரத்தில், கடந்த இரு மாதங்களாக அனல் பறக்கும் வெயில் அடிக்கிறது. மதிய நேரத்தில் மக்கள் நடமாட்டமே குறைவாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 4:15 மணிக்கு மழை பெய்ய துவங்கியது.
அன்னுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழையும், அதன் பின்னர் அரை மணி நேரம் லேசான மழையும் பெய்தது.
சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மற்றும் கோவை ரோடு கே.ஜி. கார்னரில் மழை நீர் தேங்கியது.
பல நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். குளம், குட்டைகளுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது.