UPDATED : ஜூலை 29, 2026 08:16 PM
ADDED : ஜூலை 29, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: கோவையின் மேற்கு புறநகர் பகுதியான தொண்டாமுத்துார் வட்டாரத்தில் கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனால், வெயிலின் தாக்கமின்றி, குளிர்ந்த சூழல் நிலவி வந்தது. தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளான, சாடிவயல், ஆலாந்துறை, நரசீபுரம், பூண்டி, தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலை முதல் மாலை வரை, சாரல் மழை பெய்தது. இதனால், தொண்டாமுத்தூர் வட்டார பகுதி முழுவதும், மிகவும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
