தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடியுடன் பெய்த கனமழை

இடியுடன் பெய்த கனமழை

இடியுடன் பெய்த கனமழை


ADDED : நவ 18, 2024 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 10 நாட்களாக சாரல்மழை மட்டுமே பெய்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு இடியுடன் கனமழை பெய்தது.

இதனால், வால்பாறை முழுவதும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பி.ஏ.பி., அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 150.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 170 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 349 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):

சோலையாறு - 21, வால்பாறை - 3, பரம்பிக்குளம் - 2, ஆழியாறு - 10, மேல்நீராறு - 19, கீழ்நீராறு - 14, காடம்பாறை - 54, மேல்ஆழியாறு - 37, பெருவாரிப்பள்ளம் - 3, நவமலை - 14, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us