/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடியுடன் கனமழை குளிர்ந்தது கோவை
/
இடியுடன் கனமழை குளிர்ந்தது கோவை
ADDED : மே 07, 2025 07:11 AM
கோவை : பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கொட்டிய கனமழையால், ரோடுகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில், வரும் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்; கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
நேற்று காலையில், வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. பிற்பகல், 3:30 மணியளவில் வானம் இருண்டு, இடியுடன் கூடிய கனமழை கொட்டியது.
காந்திபுரம், சிவானந்தா காலனி, துடியலுார், தடாகம் ரோடு, ஆர்.எஸ்.புரம், கணபதி, கணுவாய், ஆவாரம்பாளையம், பீளமேடு, விமான நிலையம், சிங்காநல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோவை - சத்தி ரோடு, ஆவாரம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மழையால், கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ந்தகாலநிலை நிலவியது.