/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றுடன் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
காற்றுடன் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஏப் 29, 2025 09:19 PM

வால்பாறை; வால்பாறையில், காற்றுடன் பெய்த கனமழையால், மரம் விழுந்தும், மின் கம்பம் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறையில் கடந்த ஐந்து மாதங்களாக, மழைப்பொழிவு குறைந்து, பனிப்பொழிவு அதிகரித்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இடையிடையே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்யும் கோடை மழையால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை, ேஷக்கல்முடி, முருகாளி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள் ரோட்டில் சரிந்தன.
சோலையாறு அணையிலிருந்து முருகாளி எஸ்டேட் செல்லும் ரோட்டில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்கம்பம் ரோட்டில் சரிந்து விழுந்தது; இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மின் வாரிய அதிகாரிகள் சரிந்த மின் கம்பத்தை இரவோடு, இரவாக மாற்றியமைத்தனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு - 38, பரம்பிக்குளம் - 3, ஆழியாறு - 2, மேல்ஆழியாறு - 3, சர்க்கார்பதி - 20, வேட்டைக்காரன்புதுார் - 38, துணக்கடவு - 13, பெருவாரிப்பள்ளம் - 15என்ற அளவில் மழை பெய்தது.