/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக மழையால் மானாவாரி கொத்தமல்லி பாதிப்பு
/
அதிக மழையால் மானாவாரி கொத்தமல்லி பாதிப்பு
ADDED : டிச 19, 2025 06:29 AM
உடுமலை: மானாவாரி கொத்தமல்லி சாகுபடியில், அதிக மழை காரணமாக, செடிகள் பாதித்து, விளைச்சல் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
தானிய தேவைக்காக மேற்கொள்ளப்படும் இந்த சாகுபடியில், கடந்த சில ஆண்டுகளாக, மகசூல் பாதிப்பு, குறைந்த விலை உட்பட காரணங்களால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
நடப்பாண்டு, விதைப்புக்குப்பிறகு, தொடர் மழை பெய்தது. அதிக ஈரப்பதம் காரணமாக, முளைப்புத்திறன் பாதித்தது. மேலும், பார்த்தீனியம் உட்பட களைச்செடிகளின் பரவலால், செடிகளின் இயல்பான வளர்ச்சி குறைந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: கொத்தமல்லி விதைப்புக்கு பிறகு அதிக மழையால், செடிகள் பாதித்துள்ளன; ஏக்கருக்கு, 20 தொழிலாளர்கள் வரை களையெடுக்கும் பணிக்கு தேவைப்படுகின்றனர்.
குறித்த நேரத்தில், தொழிலாளர் கிடைக்காததால், களையெடுக்க முடியாமல், செடிகளின் வளர்ச்சி பாதித்துள்ளது. எனவே, விளைச்சல் குறையும் வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

