/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீத்தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்
/
தீத்தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்
ADDED : ஜன 10, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; தீத்தடுப்பு ஒத்திகைக்காக ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்து செல்லும் பயிற்சியில், வீரர்கள் ஈடுபட்டனர்.
சூலுாரில் விமானப்படைத்தளம் உள்ளது. இங்கு, போர்ப்படை விமானங்கள் மற்றும் மீட்பு பணி ஹெலிகாப்டர்கள் உள்ளன. பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளுக்காக இத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் செல்லும்.
மேலும், மீட்பு பணி பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபடுவர். தீத்தடுப்பு பணிகளில் ஈடுபடும்போது, ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்து செல்வர். அதற்காக, சூலுார் பெரிய குளத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் வந்து பெரிய பக்கெட்டில் தண்ணீர் எடுத்து செல்லும் பயிற்சியில் வீரர்கள் நேற்று ஈடுபட்டனர்.

