/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டிக்கு 'பை'க்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

ADDED : ஏப் 16, 2025 09:59 PM

மேட்டுப்பாளையம், ; ஊட்டிக்கு 'பை'க்கில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோடை சீசன் துவங்கியதை அடுத்து, ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளன. மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகே உள்ள இ- பாஸ் சோதனை சாவடியில், போலீசார் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்களை, நிறுத்தி வைத்து அவர்களுக்கு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பண்ணாரி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது. லைசென்ஸ் இல்லாமல், வாகனங்கள் ஓட்டினால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஊட்டி மலைப்பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் இருவருமே, கட்டாயம் ஹெல்மெட் போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். காரில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் போடவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். மலைப்பகுதியில் அதிக வேகமாக செல்வதை தவிர்த்து, 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.