நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சின்ன வதம்பச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தக பைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
சுல்தான்பேட்டை அடுத்த சின்ன வதம்பச்சேரி ஸ்ரீ. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில்,தேவாங்கர் முன்னேற்ற அமைப்பு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாசன் அறக்கட்டளை சார்பில், புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு நடந்தது.
மாநில தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். 150 மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
கவுரவ தலைவர் ராமச்சந்திரன் கிருஷ்ணன், சூலுார் ஒன்றிய பொறுப்பாளர் ராமசாமி, பூரண சந்திரன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.