நிலுவை இன்றி வரி செலுத்தி வளர்ச்சி பணிக்கு உதவுங்க
நிலுவை இன்றி வரி செலுத்தி வளர்ச்சி பணிக்கு உதவுங்க
UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:48 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அனைத்து வரியினங்களையும் நிலுவை இன்றி செலுத்த அன்னுார் பேரூராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அன்னூர் பேரூராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
வீடு, வணிக மற்றும் தொழிற்சாலைகள், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, உரிமக்கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும். வரும் மார்ச் 31 வரையிலான அரையாண்டு வரி இனங்களையும், பேரூராட்சி அலுவலகத்திலோ ஆன்லைன் வாயிலாக செலுத்தி வளர்ச்சி பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி பொருத்திய வாகனத்தில் பேரூராட்சி ஊழியர்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
