/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சின்ன வெங்காயத்தை உழவர் சந்தையில் விற்க உதவணும்'
/
'சின்ன வெங்காயத்தை உழவர் சந்தையில் விற்க உதவணும்'
'சின்ன வெங்காயத்தை உழவர் சந்தையில் விற்க உதவணும்'
'சின்ன வெங்காயத்தை உழவர் சந்தையில் விற்க உதவணும்'
ADDED : நவ 16, 2025 12:48 AM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடம் சார்பில், சின்ன வெங்காயத்தை சந்தைப்படுத்துதல் தொடர்பான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக வேளாண் வணிகத்துறை வேளாண்மை அலுவலர் ஹில்டா பங்கேற்று, அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் விவசாயிகள் பேசியதாவது:
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சராசரியாக 3,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. 12 ஆயிரம் டன் விளைச்சல் கிடைக்கிறது.
சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் செலவாகிறது. ஆனால் வியாபாரிகள், 25 ரூபாய்க்கு வாங்கி செல்வதால் நஷ்டம் தான் ஏற்படுகிறது. உரிய விலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் இருப்பில் உள்ளது.
கோவை மாவட்ட மக்களின், ஒரு நாள் தேவைக்கு, 3 டன் வெங்காயம் தேவை. உழவர் சந்தையில், விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய முடிவதில்லை.
எனவே, வேளாண் விற்பனை கூடத்தின் மூலம் உழவர் சந்தையில் விவசாயிகளின் சின்ன வெங்காயங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால், இரண்டு மாதங்களில் தேக்கமடைந்துள்ள சின்ன வெங்காயம் நல்ல லாபத்திற்கு விற்பனையாகும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

