/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை நார் கூட்டுக்குழுமங்கள் துவங்க உதவணும்! சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தினத்தில் கோரிக்கை
/
தென்னை நார் கூட்டுக்குழுமங்கள் துவங்க உதவணும்! சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தினத்தில் கோரிக்கை
தென்னை நார் கூட்டுக்குழுமங்கள் துவங்க உதவணும்! சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தினத்தில் கோரிக்கை
தென்னை நார் கூட்டுக்குழுமங்கள் துவங்க உதவணும்! சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தினத்தில் கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2025 09:53 PM
பொள்ளாச்சி; பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் ஆண்டுதோறும், ஜூன் 27 (இன்று) கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம் நிர்ணயிக்கப்பட்டது. நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில், தென்னை நார் தொழிலை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
சுய சார்பு பாரதம் என்ற கொள்கையின் கீழ், மத்திய அரசு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள், வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசின் கீழ் இயங்கும் கயிறு வாரியம், கயிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில், தென்னை நார் தொழிலை மேம்படுத்த நாடு முழுவதும், 54 கூட்டுக்குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டு, 70 - 80 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது.
கயிறு பொருட்கள் உற்பத்தி குறித்து பயிற்சி பெறும் வகையில், தஞ்சாவூரில் பயிற்சி மையம் உள்ளது. மண் அரிப்பை தடுக்க 'காயர் ஓவன் ஜீவன் டெக்ஸ்டைல்ஸ்', மரம் வெட்டுவதைதடுக்க தென்னை நார் பலகைகள் உதவுகின்றன.
சீனாவுக்கு செல்லும் தென்னை நார், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.இச்சூழல் மாற, தற்போது கயிறு வாரியம் வாயிலாக, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சிறு, குறு, நடுத்தர அமைச்சகத்தின் திட்டமான, 'செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்' வாயிலாக, மாநில அரசுக்கு நிதி ஒதுக்கி பல்வேறு பொருட்களை தயாரித்து, சந்தைப்படுத்த மேலாண்மை பயிற்சி நிதியை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
சிறு, குறு, நடுத்தர நிறுவன தினம் கொண்டாடும் நிலையில், தென்னை நார் தொழிலை மேம்படுத்த, 150 கூட்டுக்குழுமங்கள் துவங்க வேண்டும் என, வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு, கூறினார்.