/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்யா குருகுலத்தில் சேர இதோ அழைப்பு
/
கன்யா குருகுலத்தில் சேர இதோ அழைப்பு
ADDED : மே 10, 2025 01:41 AM
கோவை : கோவை,பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆங்கில மற்றும் தமிழ் வழிக்கல்வியில் பயில, பெண் குழந்தைகளிடமிருந்து சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இங்கு, 4ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பயில விருப்பமுள்ளவர்கள், சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்பட்ட மற்றும் பிற்பட்ட இனங்களைச் சேர்ந்த மாணவிகள், வருடாந்திர குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதி உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, 'செயலாளர், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள், சிவில் விமான நிலைய அஞ்சல், கோயம்புத்தூர் - 641014' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

