இதோ மறுபடியும் பிடிஎஸ்.... எகிறுது இளைஞர்கள் 'பல்ஸ்'
இதோ மறுபடியும் பிடிஎஸ்.... எகிறுது இளைஞர்கள் 'பல்ஸ்'
ADDED : மார் 08, 2026 05:31 AM

உலகப் புகழ்பெற்ற கே- பாப் இசைக்குழுவான பிடிஎஸ், நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய ஆல்பம், உலகளாவிய நிகழ்ச்சிகளுடன் மீண்டும் களம் இறங்க உள்ளது. இளைஞர்களின் பல்சை எகிற வைத்துள்ளது இவர்களின் வரவு!
' ARIRANG' என்ற புதிய ஆல்பம் மார்ச் 20ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 'பிடிஎஸ் கம்பேக் லைவ் ரிலே ஹரிராங்க்' என்ற பெரிய நிகழ்ச்சி மார்ச் 21ல் தென் கொரியாவின் சியோலில் உள்ள குவாங்வாமுன் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்க்கும் வகையில் ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது.
இந்த 'கம் பேக்' நிகழ்ச்சிக்கு பிறகு பிடிஎஸ் குழுவினர் ARIRANG tour என்ற உலக சுற்றுப்பயணத்தையும் செல்ல இருக்கின்றனர்.
இந்த கம்பேக் அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்ல, பல சிறு வணிகர்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
டி-ஷர்ட், போஸ்டர், ஸ்டிக்கர், கீ -செயின் போன்ற பிடிஎஸ் சார்ந்த பொருட்களுக்கு அதிக மவுசு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
''இந்த பிடிஎஸ் கம் பேக் காலத்தில், ரசிகர்கள் நினைவு பொருட்களை அதிகமாக வாங்குவார்கள். அதற்காக புதிய டிசைன்களில் பொருட்களை தயாரித்து வருகிறோம்'' என்று வர்த்தகர்கள் சமூக வலைதளங்களை குஷிப்படுத்துகின்றனர்.
மொத்தத்தில் பிடிஎஸ் ஆர்மியின் வருகையை, உலகமே ஒரு பண்டிகை போல் கொண்டாட காத்திருக்கிறது.
பிடிஎஸ் உறுப்பினர்கள் ஏழு பேரும், ஒரே மேடையில் தோன்றுவது என்றால் சும்மாவா!
