தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இதோ ஒரு ஜில் தகவல்! கோவையில் வெயிலின் உக்கிரம் குறையும்

 இதோ ஒரு ஜில் தகவல்! கோவையில் வெயிலின் உக்கிரம் குறையும்

 இதோ ஒரு ஜில் தகவல்! கோவையில் வெயிலின் உக்கிரம் குறையும்


ADDED : ஏப் 24, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 08:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெப்பம் தாங்காமல் தவிக்கின்றனர்.

ஏப்ரல் முதல் வாரத்தில் சுட்டெரிக்க துவங்கிய வெயில், நேற்று வரை குறையவில்லை. பல மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கோவையில் கடந்த ஒரு வாரமாக, 100 டிகிரி வெப்பம் தொடர்கிறது. நேற்று 100.1 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் சத்தியமூர்த்தி கூறுகையில், ''இந்த வெயிலின் தாக்கம் அதிகம்தான். 100 டிகிரியை கடந்துள்ளது. 2010 ம் ஆண்டு இது போல 100.3 டிகிரி வரை இருந்துள்ளது. இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் இனி வெயிலின் தாக்கம் குறையும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us