/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே நேரத்தில் நால்வருக்கு உதவும் ரத்த தானம் செய்ய இதோ அழைப்பு
/
ஒரே நேரத்தில் நால்வருக்கு உதவும் ரத்த தானம் செய்ய இதோ அழைப்பு
ஒரே நேரத்தில் நால்வருக்கு உதவும் ரத்த தானம் செய்ய இதோ அழைப்பு
ஒரே நேரத்தில் நால்வருக்கு உதவும் ரத்த தானம் செய்ய இதோ அழைப்பு
ADDED : ஜூன் 07, 2025 11:36 PM
அன்னூர்: அன்னூர் அரசு மருத்துவமனையில், இன்று (8ம் தேதி) காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை ரத்ததான முகாம் நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், 18 முதல் 60 வயது வரையிலான இரு பாலரும் ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால், எந்த பாதிப்பும் இல்லை. 48 மணி நேரத்தில் ரத்தம் மீண்டும் ஊறிவிடும். ரத்த தானம் செய்வதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
'ஒருவரின் ரத்த தானம், நான்கு பேருக்கு பயன் தரும். எனவே முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்' என, ரத்த வங்கி அலுவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.