/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ - பாஸ் நடைமுறை உயர்நீதி மன்ற குழு ஆய்வு; அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுரை
/
இ - பாஸ் நடைமுறை உயர்நீதி மன்ற குழு ஆய்வு; அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுரை
இ - பாஸ் நடைமுறை உயர்நீதி மன்ற குழு ஆய்வு; அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுரை
இ - பாஸ் நடைமுறை உயர்நீதி மன்ற குழு ஆய்வு; அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுரை
ADDED : டிச 23, 2025 07:20 AM

வால்பாறை: வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் செயல்பாடுகள் குறித்து உயர்அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கோவை மாவட்டம், வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் இ-பாஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆன்லைன் வாயிலாகவும், ஆழியாறு மற்றும் சோலையாறு அணை வனத்துறை சோதனை சாவடிகளிலும் சுற்றுலாபயணியர் இ-பாஸ் பெற்று செல்லும் வசதியும் தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி, வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை குறித்து கண்டறிய, நீதிமன்ற உத்தரவு படி மூத்த வழக்கறிஞர் சந்தானராமன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
முன்னதாக, ஆழியாறு சோதனை சாவடியில் ஆய்வு செய்த குழுவினர், கேரள மாநில எல்லையில் உள்ள சோலையாறுஅணை வனத்துறை சோதனை சாவடிகளிலும் ஆய்வு செய்தனர்.
அப்போது, இ-பாஸ் நடைமுறை குறித்து, சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இதனால், வந்து செல்வதில் எந்த சிரமம் இல்லை. தொடர்ந்து இ-பாஸ் நடைமுறையில் இருக்க வேண்டும்,' என்றனர்.
ஆய்வுக்குழுவினர் கூறியதாவது: வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதே போல், உள்ளூரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ-பாஸ் இல்லாமல் வால்பாறைக்கு செல்ல யாரையும் அனுமதிக்கூடாது. இதை உள்ளூர் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட துறை சார்பில் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
ஆய்வின் போது, பொள்ளாச்சி டி.எப்.ஓ., தேவேந்திரகுமார்மீனா, வால்பாறை நகராட்சி கமிஷனர் குமரன், தாசில்தார் அருள்முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

