/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
/
ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
ADDED : அக் 16, 2025 08:54 PM
அன்னுார்: குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
குன்னத்தூர் நட்சத்திரா அவென்யூவில் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பொது பயன்பாட்டுக்கு என ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்ட இடத்தில் சிலர் கோவில் கட்டும் பணியை துவக்கி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி உள்பட சிலர் வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் மற்றும் முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். பொது பயன்பாட்டு இடத்தில் கோவில் கட்டுவதால் பாதிப்பு ஏற்படும். அங்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும் என்றனர்.
இதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மோகன் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'இந்த புகார் குறித்து ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர், கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஐந்து பேரும் நான்கு வாரங்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும்.
அதுவரை எந்த கட்டுமான பணியும் நடைபெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவில் கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது.