sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி தெளிப்பு காய்கறி பயிர்கள் பாதிப்பு

/

அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி தெளிப்பு காய்கறி பயிர்கள் பாதிப்பு

அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி தெளிப்பு காய்கறி பயிர்கள் பாதிப்பு

அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி தெளிப்பு காய்கறி பயிர்கள் பாதிப்பு


ADDED : செப் 12, 2025 09:20 PM

Google News

ADDED : செப் 12, 2025 09:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி மருந்துகளால், பயிர்கள் கருகி பாதிக்கிறது. இதை தடை செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், காய்கறிகள், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.பயிர்களுக்கு பாய்ச்சும் தண்ணீர், சத்துக்களால் அதிகளவு களைச்செடிகள் வளர்கின்றன. இதை அகற்ற களைக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. அதில் வீரியம் கொண்ட மருந்துகள் தெளிப்பால், பயிர்கள் கருகுவதாக புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி, நஞ்சேகவுண்டன்புதுாரில் உள்ள ஒரு தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன், டிராக்டர் வாயிலாக களைக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டது. இந்த மருந்தின் வீரியம் அதிகமாக இருந்ததால், தோட்டத்தில் உள்ள பந்தல் சாகுபடியில், பாகற்காய் கொடி, 500 மீட்டர் துாரத்துக்கு கடுமையாக பாதித்துள்ளன. காய்கறி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயி சிங்காரவேலுகூறியதாவது:

தோட்டங்களில் களைச்செடிகளை அழிப்பதற்கு, மூன்று வகையான களைக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. அதில், 10 நாள் கழித்து செடிகள் காயும். மேலும், '2,4 - டி' வேதிப்பொருட்கள் கலந்த களைக்கொல்லி மருந்து அதிக வீரியம் கொண்டது.

இதை தெளிப்பான் போன்ற உபகரணங்கள் கொண்டு அடிக்கின்றனர். அப்போது, காற்றின் வேகத்துக்கு களைக்கொல்லி பரவும் போது, அருகிலுள்ள விளைநிலங்களில் காய்கறி பயிர்கள் கருகுகின்றன.

ஆனால்,தென்னை, கரும்பு, வாழையில் இந்த மருந்து தெளிப்பதால் பாதிப்பு இல்லை. அதன் அருகே மற்ற தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிபயிர்கள் இலைகள் சுருண்டு கருகுகின்றன.

மேலும், சிலர், உடனடியாக கருக யூரியா, சல்பெட், ஒட்டுபசை போன்ற வேதிப்பொருட்களை கலந்து தெளிப்பதால் உடனடியாக கருகுகின்றன. இது போன்று, ஏக்கருக்கு, 3,000 ரூபாய் செலவு செய்து டிராக்டரில் களைக்கொல்லி மருந்துகள் தெளிப்பதாலும், அருகே உள்ள தோட்டங்களில் காய்கறி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

அதிக வீரியம் கொண்ட இவ்வகை களைக்கொல்லி மருந்துகள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. அதே போன்று, தமிழகத்திலும் ஆய்வு செய்து வேளாண்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us