/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் சேவைக்காக அலைமோதும் மக்கள்
/
ஆதார் சேவைக்காக அலைமோதும் மக்கள்
ADDED : செப் 12, 2025 09:19 PM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, வடசித்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று, கோதவாடி மற்றும் பனப்பட்டி ஊராட்சிகளுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில், பல அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பெரும்பாலான துறைகளில் கூட்டமில்லை என்றாலும், ஒவ்வொரு பிரிவிலும் இரண்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருந்தனர். ஆனால் ஆதார் சேவை மையத்தில் மட்டும் ஒரே நபர் இருந்ததால், அந்தப் பிரிவில் மட்டும் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், வழக்கமாக நடத்தப்படும் முகாம்களில், மாலை 3:00 மணியளவில் கூட்டம் குறையும். ஆனால், நேற்றைய முகாமில், ஆதார் பிரிவில் மட்டும், 4:00 மணிக்கு மேலாகியும் கூட்டம் குறைவில்லை.
'டோக்கன்' முறை கடைபிடிக்கப்படாததால், மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சிலர் அதிருப்தி அடைந்தனர். இனி வரும் முகாம்களில், ஆதார் சேவைக்கு கூடுதல் நபர்களை நியமித்து, மக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.