ADDED : மார் 17, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் (வழக்கு) குறிஞ்சி செல்வி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை, நஞ்சுண்டாபுரம் ரோட்டில், நாடார் உயர்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 23 வகையான உயர் ரக மதுபான பாட்டில்கள் 29 இருந்தன.
விசாரணையில், அவர் தமிழகம் முழுவதுமுள்ள பிரபல துணிக்கடை உரிமையாளரின் தனி டிரைவரான திண்டுக்கல்லை சேர்ந்த ஜோத்தீஸ்வரன், 29 என்பதும், பொள்ளாச்சி செல்ல வந்ததும் தெரிந்தது. கார், மது பான பாட்டில்களுடன், போத்தனூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிந்தனர்.
