/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை
/
பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை
பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை
பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை
ADDED : செப் 30, 2025 10:51 PM

பி. எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் மூத்த இருதயவியல் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரன் கூறியதாவது:
மருத்துவமனைகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில்,அனைத்து மருத்துவ சிகிச்சைகளும், தரமாக, குறைவான செலவில் செய்யப்படும் மருத்துவமனைகளை கண்டறிவது மிகவும் சவாலானது. புகழ்பெற்ற கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும், தரமாகவும், செலவு குறைவாகவும் செய்யப்படுகிறது.
மேலும், நோயாளிகளை கண்ணியமான முறையில் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும்.பி.எஸ்.ஜி., அறக்கட்டளையின் கீழ், பி.எஸ்.ஜி., பல்நோக்கு மருத்துவமனை செயல்படுகிறது. சிறிய சிகிச்சைகள் முதல், இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ரோபோடிக் போன்ற அதிநவீன சிகிச்சைகள் வரை நியாயமான கட்டணத்தில், சிறப்பான முறையில் செய்யப்படுகிறது. எளிய மக்களுக்கு குறைவான கட்டணத்தில் உயர்தர சிகிச்சையை வழங்குவதே பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் உயர்ந்த குறிக்கோளாகும்.
பல தரப்பட்ட மக்களுக்கும் பயன்படும் வகையில் முதலமைச்சர் மற்றும் பிரதம மந்திரி உள்பட பல்வேறு காப்பீ டுகளின் கீழ் உறுப்பு மாற்று சிகிச்சை உள்பட பல தரப்பட்ட சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. நோயாளிகளின் ஒவ்வொரு தேவையையும், சேவையாக பி.எஸ்.ஜி., மருத்துவமனை நிவர்த்தி செய்கிறது. நோயாளிகளின்நலனை மையமாக வைத்தே பி.எஸ்.ஜி., மருத்துவமனை செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.