ADDED : பிப் 16, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூரில் ஜோதிராவ் பூலே கல்வி மையம் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை, வங்கிக் கடன் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மாலை நேர கல்வி மைய ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மையத்தின் தலைவர் கனகராஜ் தலைமை வகித்து பேசுகையில், 21 இடங்களில் மாலை நேர இலவச கல்வி மையம் செயல்படுகிறது, என்றார்.
அரசு மருத்துவமனை டாக்டர் விஜய் பேசுகையில், ஏழ்மையிலிருந்து மீள கல்வி உதவும். கல்வியும் நற்பண்புகளும் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும், என்றார்.
ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார், நிர்வாகிகள் புஷ்பராஜ், பெருமாள் சாமி, ரங்கநாத மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
