தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு

 மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு

 மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு


ADDED : மே 16, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே லெவல் கிராசிங் மேம்பால கட்டுமான பணியை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி, துடியலுார் கோவில்பாளையம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே லெவல் கிராசிங் பகுதியில், கோவை மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் செல்வதால், அடிக்கடி வாகன நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இங்கு 2024ல் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி, தற்போது முடிவடைந்து, வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடக்கும் பணிகள் மற்றும் நிறைவடைந்த பணிகளை, துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆண்டுதோறும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், கட்டுமானப் பணியை நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில் கோவை நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்டத்தின் வாயிலாக, புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் உள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. திருப்பூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு இன்ஜினியர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், பாலம் ஓடுதளத்தின் தரம், துாண்கள், சேவை சாலை மற்றும் வடிகால் அமைப்பு ஆகியவற்றின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது, திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் ரத்தினசாமி, கோவை நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்ட இன்ஜினியர் சுஜாதா, தர கட்டுப்பாடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் சித்ரா மற்றும் உதவி கோட்ட இன்ஜினியர்கள் மற்றும் உதவி இன்ஜினியர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us