/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலை அதிகாரிகள் மலைப்பாதையில் ஆய்வு
/
நெடுஞ்சாலை அதிகாரிகள் மலைப்பாதையில் ஆய்வு
ADDED : செப் 23, 2024 10:47 PM

வால்பாறை : வடகிழக்குப்பருவ மழை துவங்கவுள்ள நிலையில், வால்பாறை மலைப்பாதையில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள வால்பாறையில், கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்குப்பருவ மழை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக பெய்தது.
இதனால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், பாறைகள் உருண்டும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இம்மாத இறுதியில் வடகிழக்குப்பருவ மழை துவங்கவுள்ள நிலையில், மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வால்பாறையில் நெடுஞ்சாலைத்துறையினர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளதை, உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.