/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலை பள்ளங்கள் சீரமைப்பு
/
நெடுஞ்சாலை பள்ளங்கள் சீரமைப்பு
ADDED : ஜன 30, 2025 11:21 PM

உடுமலை: : மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்குட்பட்ட ரோடுகளில், சிறப்புத்திட்டத்தின் கீழ், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை; பொள்ளாச்சி - தாராபுரம், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலைகளின் ஒரு பகுதி பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோடுகளில், தொடர் மழைக்குப்பிறகு, பல்வேறு இடங்களில், பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
தற்போது, அரசின், 'பள்ளமில்லா சாலை; பாதுகாப்பான பயணம்,' என்ற சிறப்புத்திட்டத்தின் கீழ், அனைத்து ரோடுகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், 24வது கி.மீ., முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டமாக, மாவட்ட முக்கிய ரோடுகள் மற்றும் மாவட்ட இதர ரோடுகளிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

