/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை சாலையை உருவாக்கும் பணி: நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
/
பசுமை சாலையை உருவாக்கும் பணி: நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
பசுமை சாலையை உருவாக்கும் பணி: நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
பசுமை சாலையை உருவாக்கும் பணி: நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
ADDED : அக் 29, 2025 11:45 PM

பொள்ளாச்சி: பசுமை சாலைகளை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சி பகுதியில், சாலையோரங்களில் வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியில், சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு, பசுமை சாலைகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் புதிய மரக்கன்றுகள் நடும் பணிகளும் நடைபெறுகின்றன. தற்போது, வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் உள்ளதால், நடுப்புணி, முத்துார்-ராமபட்டிணம் ரோடு, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டோரத்தில் வேம்பு மரங்கள் அதிகளவில் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:
பசுமை சாலைகளை உருவாக்குதல், சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக, சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்று நடவு செய்யப்படுகிறது. தற்போது, நடவு செய்யப்படும் மரக்கன்றுகள், இனி வரும் நாட்களில், விரிவாக்கம் செய்யப்பட்டாலும், பாதிப்பு ஏற்படாத வகையில் இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
மரக்கன்று நடவு செய்தவுடன் கால்நடைகள், காற்றினால் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை சுற்றி வலையும் அமைக்கப்படுகிறது. பணியாளர்களைக் கொண்டு, முழுமையாக கண்காணித்து, பராமரிக்கப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

