sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தள்ளுவண்டி கடைகளை அகற்ற நோட்டீஸ்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கெடு

/

 தள்ளுவண்டி கடைகளை அகற்ற நோட்டீஸ்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கெடு

 தள்ளுவண்டி கடைகளை அகற்ற நோட்டீஸ்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கெடு

 தள்ளுவண்டி கடைகளை அகற்ற நோட்டீஸ்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கெடு


ADDED : ஜன 28, 2026 08:14 AM

Google News

ADDED : ஜன 28, 2026 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில் அமைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையடுத்து, வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்நிலையில், வாட்டர்பால்ஸ் முதல் அய்யர்பாடி, 40வது கொண்டைஊசி வளைவு வரை, 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகளில் சுற்றுலா பயணியர் திண்பண்டங்களை வாங்கி சாப்பிட, அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சாலையோரங்களில் சிதறிக்கிடக்கும் உணவுகளை உட்கொள்ள இரவு நேரத்தில் சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் வருகின்றன. இதனால், ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், வனவிலங்கு - மனித மோதலும் ஏற்படுகிறது.

இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பாதையில், விதிமுறை மீறி ரோட்டில் அமைக்கபட்டுள்ள தள்ளுவண்டி கடைகளால், இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, சுற்றுலா பயணியர் பயன்படுத்தி திறந்தவெளியில் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, தள்ளுவண்டி கடைகள் அகற்றப்படும்.

வால்பாறை ரோட்டில், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதையும், அவற்றால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us