/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோத்தகிரி சாலையில் இரும்பு தடுப்புகளுக்கு அலுமினிய பெயின்ட்; விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை
/
கோத்தகிரி சாலையில் இரும்பு தடுப்புகளுக்கு அலுமினிய பெயின்ட்; விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை
கோத்தகிரி சாலையில் இரும்பு தடுப்புகளுக்கு அலுமினிய பெயின்ட்; விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை
கோத்தகிரி சாலையில் இரும்பு தடுப்புகளுக்கு அலுமினிய பெயின்ட்; விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை
UPDATED : ஏப் 21, 2025 10:27 PM
ADDED : ஏப் 21, 2025 09:08 PM

மேட்டுப்பாளையம், ; கோத்தகிரி சாலையில், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க, மலைப்பாதையில் அமைத்துள்ள இரும்பு தடுப்புகளுக்கு, அலுமினிய பெயின்ட் அடிக்கும் பணியானது நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை, மாநில நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டதாகும். இப்பாதையானது மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் சாலையின் ஓரத்தில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் தடுப்புகளை அமைத்துள்ளன. தற்போது கோடை சீசன் துவங்கிய நிலையில், ஏராளமான வாகனங்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றன. இன்னும் ஓரிரு வாரத்தில், ஊட்டி சாலையை ஒருவழி பாதையாக, மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைக்கும். இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு, அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரஜினிகாந்த் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னூர் வழியாக ஊட்டி செல்லும் பாதையானது ஏற்றமாக இருப்பதால், அதிக வேகத்தில் செல்லாமல், குறைவான வேகத்தில் வாகனங்கள் செல்ல வேண்டும்.
அதே நேரத்தில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி, குஞ்சப்பனை வழியாக மேட்டுப்பாளையம் வரை உள்ள மலைப்பாதைகள் இறக்கமாக இருக்கும். இதில் வரும் வாகனங்கள் வேகத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க, சாலையின் ஓரத்தில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கான்கிரீட் தடுப்புகள் அமைக்க முடியாத இடத்தில், கெட்டியான இரும்பு தகட்டால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் ஓரங்களில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் தடுப்புகளுக்கு, வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இரும்ப தடுப்புகளுக்கு, அலுமினிய பெயின்ட்அடிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவரும், இரும்பு தடுப்பும் வாகனங்களின் வெளிச்சத்தில், பிரகாசமாக இருக்கும். இதனால் சாலையின் ஓரத்தில் தடுப்புகள் இருப்பது, வாகன ஓட்டுனர்களுக்கு தெளிவாக தெரிய வாய்ப்புள்ளது.
ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் வரை மலைப்பாதையில் வரும் வாகனங்கள் அனைத்தும், இரண்டாவது கியரிலேயே வரவேண்டும். வேகமாக வந்து பிரேக் அடித்துக் கொண்டே வந்தால், டிரம் சூடேறி ஒரு கட்டத்தில் பிரேக் பிடிக்காத நிலை ஏற்படும். அது மாதிரியான நேரத்தில்தான் விபத்துகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு கோட்ட பொறியாளர் தெரிவித்தார்.