தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெற்றியை நிர்ணயிப்பது மலைப்பகுதி ஓட்டுகளே! அறுவடைக்கு திட்டமிடும் வேட்பாளர்கள்

 வெற்றியை நிர்ணயிப்பது மலைப்பகுதி ஓட்டுகளே! அறுவடைக்கு திட்டமிடும் வேட்பாளர்கள்

 வெற்றியை நிர்ணயிப்பது மலைப்பகுதி ஓட்டுகளே! அறுவடைக்கு திட்டமிடும் வேட்பாளர்கள்


ADDED : ஏப் 03, 2026 04:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை சட்டசபை தொகுதியில், மலைப்பகுதி ஓட்டுகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதால், ஓட்டுகளை சிதறாமல் பெற வேட்பாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், வால்பாறை சட்டசபை தொகுதியில் வால்பாறை நகராட்சி, ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் ஆகிய நான்கு பேரூராட்சிகள், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகள் உள்ளன.

வால்பாறை சட்டசபை தொகுதியில், ஆண்கள், 81,504, பெண்கள் 90,769, மூன்றாம் பாலினம், 21 என மொத்தம், 1,72,284 வாக்காளர்கள் உள்ளனர். இதில் வால்பாறை மலைப்பகுதியில் மட்டும் ஆண்கள், 19,317, பெண்கள் 20,757, மூன்றாம் பாலினம், 3 என மொத்தம், 40,077 வாக்காளர்கள் உள்ளனர்.

வால்பாறை தொகுதியில், இது வரை அ.தி.மு.க., 5 முறையும், தி.மு.க., - காங்., தலா மூன்று முறையும், இ.கம்யூ.,கட்சி இரண்டு முறையும், த.மா.க., ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த, 2016 தேர்தலில் 8,244 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் கஸ்துாரி வெற்றி பெற்றார். அதன்பின், 2021 தேர்தலில் 12,223 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் அமுல்கந்தசாமி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு பின் தற்போது தி.மு.க., - அ.தி.மு.க.,நேரடியாக மோதுகிறது. இது தவிர நா.த.க., - த.வெ.க., வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வால்பாறை தொகுதியை பொறுத்த வரை சமவெளிப்பகுதியில் உள்ள ஆனைமலையில் ஓட்டுக்கள் அதிக அளவில் இருந்தாலும், வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது என்னவோ வால்பாறை மலைப்பகுதி மக்களின் ஓட்டுக்கள் தான். மலைப்பகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதமும் அதிகம் இருக்கும்.

சமவெளிப்பகுதியில் நான்கு வேட்பாளர்களுக்கும் ஓட்டுக்கள் சிதறி விழும். அதனால், வால்பாறை மலைப்பகுதியில் உள்ள ஓட்டுகளை முழுமையாக அறுவடை செய்ய, தி.மு.க., வேட்பாளர் சுதாகர், அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமண சிங் ஆகியோர் தீவிரமாக உள்ளனர்.

ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர்கள் பிரதிநிதிகளை போட்டி போட்டு சந்தித்து ஓட்டு வேட்டையை துவங்கியுள்ளனர்.

வால்பாறையில், 20 ஆண்டுகளுக்கு முன், 80 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர். வனவிலங்கு - மனித மோதல் அதிகரிப்பு, சரியான வேலைவாய்ப்பு இல்லாததால், தேயிலை தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால், மலைப்பகுதியில் வாக்காளர் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. ஆனால், முந்தைய தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு பதிவான ஓட்டுகளை ஒப்பிடுகையில், மலைப்பகுதி ஓட்டுகளை வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளது தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us