/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹிந்து தர்மம், கலாசாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்: ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் பேச்சு

ADDED : பிப் 01, 2024 05:44 AM

கோவை : 'ஒவ்வொருவரும் சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விளங்க வேண்டும்,'' என்று ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் கூறினார்.
கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன்பூஜா சங்கத்துக்கு, நேற்று சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு மலர்மாலை அணிவித்து, செங்கோல் வழங்கி பூரண கும்பமரியாதை செய்து, மேளதாளங்கள் முழங்க, பூக்களை துாவி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரிலுள்ள ஹரிஹரபுரம் ஸ்ரீமடத்தை சேர்ந்த ஸ்வாமிகளுக்கு, ஸ்ரீதள பாதபூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது.
ஸ்ரீ சக்ரநவாவர்ண பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் திரளாக வந்து, சுவாமிகளை தரிசித்து ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.
அப்போது சுவாமிகள் பேசியதாவது:
அனைவரும் சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விளங்க வேண்டும். உலக ஷேமத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் ஒவ்வொருவரும் அவரவவர் செய்து வரும் பணியில், முழு உத்வேகத்துடனும், சிறப்புடனும் செயல்பட வேண்டும்.
ஹிந்து தர்மமும், நமது கலாசாரமும் நமது இரு கண்களை போன்றது. அதை பேணி பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில், நாம் ஒவ்வொருவரும் இறங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.