தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சபரிமலையில் அடிப்படை வசதி: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

 சபரிமலையில் அடிப்படை வசதி: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

 சபரிமலையில் அடிப்படை வசதி: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்


ADDED : நவ 20, 2025 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ''சபரிமலையில் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டும் என்று, ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

சபரிமலைக்கு, ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர்.

மலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் ஆகிய வசதிகள் கூட்டத்துக்கு தகுந்த மாதிரி இல்லாமல் மிகவும் குறைவாக உள்ளது.

ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால், அதற்கு தகுந்தவாறு கேரள அரசும், தேவசம் போர்டும், இணைந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். 10 வயது குழந்தைகள் முதல், 50 வயதுக்கு மேலான பெண்கள் உட்பட, பலரும் வருகை தருவதால், கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது கூட்ட நெரிசல் அதிகமாகி பக்தர்கள் அவதிப்பட்ட சூழ்நிலையில், போலீஸ் உயரதிகாரிக்கு தகவல் தெரிந்து சரி செய்யப்பட்டது. காவல்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த, மூன்று ஆண்டுகளாக பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல, பத்து மணி நேரம் முதல், 15 மணி நேரமாகிறது. மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் பக்தர்களால் அதிகமான வருமானம் வருகிறது. அந்த வருமானத்தை கொண்டு, கோவிலுக்கு நிறைய அடிப்படை வசதிகளை உருவாக்கி தர முடியும்.

ஆனால், வருவாயை மட்டும் எடுத்து கொண்டு பக்தர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அரசாங்கம் இருக்கிறது. குறிப்பாக, இந்தாண்டு ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கேரள அரசு, விதித்திருக்கிறது. எனவே, தேவசம் போர்டும், கேரள அரசும் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து, அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், உரிய அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us