/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
508 இடங்களில் விநாயகர் சிலை; ஹிந்து முன்னணி தீர்மானம்
/
508 இடங்களில் விநாயகர் சிலை; ஹிந்து முன்னணி தீர்மானம்
508 இடங்களில் விநாயகர் சிலை; ஹிந்து முன்னணி தீர்மானம்
508 இடங்களில் விநாயகர் சிலை; ஹிந்து முன்னணி தீர்மானம்
ADDED : ஜூன் 30, 2025 10:35 PM
பொள்ளாச்சி; 'விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 508 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும்,' என கோவை தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட, ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார்.கோவை கோட்ட செயலாளர்கள் பாலச்சந்திரன், அசோக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அண்ணாதுரை பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கடந்த, 22ம் தேதி மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற அனைத்து வகைகளிலும் உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வரும் ஆக., மாதம், 27ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு, 508 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது எனவும், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தி நீர் நிலைகள் விசர்ஜனம் செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகரம், சூளேஸ்வரன்பட்டி, கோமங்கலம், நெகமம் நாகர் திடல், வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, எட்டிமடை, ஆனைமலை, கோட்டூர், வால்பாறை உள்ளிட்ட இடங்களில், விநாயகர் ஊர்வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, பொதுமக்கள் ஆதரவோடு கொண்டாட விழா குழு அமைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து இடங்களிலும் ஆன்மிகத்தை பரப்பும் விதமாகவும், ஆன்மிக சிந்தனையை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்ற செய்ய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.