ADDED : அக் 13, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பேக்கரி முன் அடிதடியில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி நிர்வாகி மற்றும் கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி, திப்பம்பட்டி தனியார் கல்லுாரியில் படித்து வரும், இரு தரப்பு மாணவர்கள் இடையே, கடந்த, 10ம் தேதி பிரச்னை ஏற்பட்டது. குறிப்பாக, உடுமலை ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி முன்பு அடிதடியிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி, பிரச்னையில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி நிர்வாகி முத்துசுப்ரமணியம், கல்லுாரி மாணவர்கள், நவீன், யுவராஜ், பிரவீன், சக்தி, கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், ஜே.எம்., 2 கோர்ட் நீதிபதி உத்தரவின்பேரில், பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.