ADDED : அக் 16, 2025 08:58 PM
கோவை:
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை துவங்கிய நாள் அக்., 16. இந்நாளை இந்து வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
சுதேசி வணிகத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளை மையமாக கொண்டு இந்த வணிகர் சங்கத் திருநாளில் வணிகர்களும் வர்த்தகர்களும் சபதமேற்றனர். அதோடு கோவை வ.உ.சி.,பூங்கா வளாகத்திலுள்ள வ.உ.சி.,சிதம்பரனார் சிலைக்கு இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன், கோட்ட செயலாளர் பாலன், மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.