sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவியை மதம் மாற்ற முயற்சித்தது அம்பலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஹிந்து அமைப்புகள் 

/

மாணவியை மதம் மாற்ற முயற்சித்தது அம்பலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஹிந்து அமைப்புகள் 

மாணவியை மதம் மாற்ற முயற்சித்தது அம்பலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஹிந்து அமைப்புகள் 

மாணவியை மதம் மாற்ற முயற்சித்தது அம்பலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஹிந்து அமைப்புகள் 

1


ADDED : மே 04, 2025 02:13 AM

Google News

ADDED : மே 04, 2025 02:13 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கட்டாய மதமாற்றத்துக்காக மாணவியை அழைத்துச் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, ஹிந்து அமைப்பினர், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி, நேற்றுமுன்தினம் வளர் இளம் பெண்களுக்கான கூட்டத்தில் பங்கேற்கவும் மற்றும் பள்ளியில் 'டிசி' வாங்குவதற்காகவும் சென்றார்.

அப்போது, பள்ளிக்கு முன்பாக, வாகனத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் ஒருவர், சின்னாம்பாளையம் சர்ச்சுக்கு, 20 மாணவர்களுடன், இந்த மாணவியையும் சேர்த்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கு சென்ற பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெண்ணை தேடி பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். அங்கு மாணவி இல்லாததால் அதிர்ச்சியடைந்து, அங்குள்ள மக்களிடம் விசாரித்தனர்.

நர்ஸ் ஒருவர், சின்னாம்பாளையம் சர்ச்சுக்கு அழைத்துச் சென்றதாக மக்கள் கூறினர். சர்ச்சுக்கு சென்று பெண்ணை விடுவிக்க பெற்றோர் கேட்ட போது, மத போதகர் மாணவியை வெளியே விடவில்லை என கூறப்படுகிறது. அதன்பின், அவர்கள் வாக்குவாதம் செய்து மாணவியை மீட்டனர்.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர், கிழக்கு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்வதாக கூறி ஹிந்து அமைப்பினர் நேற்று கிழக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

ஹிந்து முன்னணி, வி.எச்.பி., மற்றும் விவேகானந்தா சேவை மைய அமைப்பினர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊஞ்சவேலாம்பட்டியில், 14 வயது சிறுமியை வாகனத்தில் கடத்தி சென்று, மதமாற்றம் செய்ய முயற்சித்துள்ளனர். மத போதகர் செல்வக்குமார், ஜபக்கூடத்தில் வயது வந்த சிறுமிகளை முட்டி போட்டு ஜபம் செய்ய வைத்துள்ளார்.

இதை கண்ட பெற்றோர், பெண்ணை விடக்கோரியும் அவர்கள் விடவில்லை. எனவே, மதமாற்றம் செய்ய முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் பவானி மற்றும் மத போதகர் செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, என்ன பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என ஆலோசிக்கிறோம் என, போலீசார் மழுப்புகின்றனர். கட்டாய மதமாற்றத்தை கண்டித்து, சின்னாம்பாளையம் சர்ச்சில் நாளை (இன்று) முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us