/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஷ்மீரில் உயிரிழந்தோருக்கு ஹிந்து அமைப்புகள் அஞ்சலி
/
காஷ்மீரில் உயிரிழந்தோருக்கு ஹிந்து அமைப்புகள் அஞ்சலி
காஷ்மீரில் உயிரிழந்தோருக்கு ஹிந்து அமைப்புகள் அஞ்சலி
காஷ்மீரில் உயிரிழந்தோருக்கு ஹிந்து அமைப்புகள் அஞ்சலி
ADDED : ஏப் 28, 2025 04:10 AM

பொள்ளாச்சி : காஷ்மீர் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், உயிர் இழந்தவர்களுக்கு, பொள்ளாச்சியில் ஹிந்து அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி நகர ஹிந்து முன்னணி சார்பில், ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர் இழந்த, 26 பேருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது. அவர்களது ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏறறப்பட்டது. இந்த செயலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், உயிர் இழந்தோருக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.மாநில இணை பொறுப்பாளர் சுகந்தி, கோட்ட பொறுப்பாளர்கள் மகேஷ்குமார், அருண், மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், கருணாகரன், பா.ஜ., தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் துரை மற்றும் விவேகானந்தா சேவை மையத்தினர் பங்கேற்றனர்.

