/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
இந்துஸ்தான் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : பிப் 26, 2024 02:16 AM

கோவை;நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் சர்வதேச திறன் மேம்பாட்டுக் கழகத்துடன்(ஐ.எஸ்.டி.சி.,), இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் பயிலும் மாணவர்களுக்கு, குயின் மார்கரெட் பல்கலையிலிருந்து, பி.எஸ்.சி., சர்வதேச பினான்ஸ் சார்ந்த பாடங்கள் வழங்கப்படும். தொழிற்துறை சார்ந்த நிதி மற்றும் பகுப்பாய்வு யுக்திகள் மற்றும் மேலாண்மை குறித்து, மாணவர்கள் கற்க முடியும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்துஸ்தான் கல்வி குழும செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா மற்றும் ஐ.எஸ்.டி.சி., மண்டல தலைவர் ராஜேஷ் பூனியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் பொன்னுசாமி ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

