/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற இந்துஸ்தான் மாணவி
/
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற இந்துஸ்தான் மாணவி
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற இந்துஸ்தான் மாணவி
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற இந்துஸ்தான் மாணவி
ADDED : நவ 11, 2025 11:04 PM

கோவை: தமிழக அரசு சார்பில் சென்னையில், 50வது ஆண்டு பொன்விழா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு போட்டி நடந்தது. இதில், இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஹேமந்த்ரா,மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு,10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பெண்கள் பிரிவு மற்றும்10 மீட்டர் ஏர் பிஸ்டல் யூத் விமன் பிரிவுகளில்,364 ஸ்கோர் பெற்று, இரண்டாவது இடம் பிடித்து,மூன்று வெள்ளி பதங்கங்களை வென்றுள்ளார்.
தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் நடத்திய இப்போட்டிகளில், மாநில அளவில் வெற்றி பெற்ற ஹேமந்த்ராவை பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.
மாணவி ஹேமந்த்ராவை, இந்துஸ்தான்கல்வி நிறுவன செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா,முதல்வர் செண்பகவல்லி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

